’சூயஸ் கால்வாயில்’ சிக்கிய கப்பலால்... உலகப் பொருளாதாரம் சிக்கல்
சனி, 27 மார்ச் 2021 (18:44 IST)
உலக சரக்குப் போக்குவரத்தின் முக்கிய வழிவாய்க்காலாக விளங்கும் சூயஸ் கால்வாயில் பிரும்மாண்ட கொள்கலன் கப்பல் ஒன்று குறுக்காகத் திரும்பி தரைதட்டி சிக்கிக்கொண்டதால் அந்த வழியாக செல்லவேண்டிய பிற சரக்குக் கப்பல்கள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
Suez Canal
இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாய் (9.6 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள சரக்கு தேங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்கின்றன கப்பல் போக்குவரத்து தொடர்பான தரவுகள்.
இதன் பொருள் ஒவ்வொரு மணி நேரமும் சுமார் 40 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், மணிக்கு ரூ.2900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
இதனால் அனைத்து நாட்டுச் சரக்குப் பொருட்களும் சூயஸ் கால்வாயில் இருந்து நகர முடியாமல் இருப்பதால் உலகப் பொருளாதாரம் சிக்கலில் இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இக்கப்பலை மீட்கும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது