3 கோடியை தாண்டிய உலக கொரோனா பாதிப்பு: இந்தியாவில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம்

வியாழன், 17 செப்டம்பர் 2020 (07:28 IST)
இந்தியாவில் ஒரே நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டிவிட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,00,22,236 என்றும், உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 9,44,623 என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 2,17,76,101 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,827,791 என்றும், பலியானோர் எண்ணிக்கை 201,321 என்றும், குணமானோர் எண்ணிக்கை 4,108,179 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,115,893 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 40,22,049 என்றும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 83,230 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 97,856 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதும் அதாவது கிட்டத்தட்ட ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 82,922 என்பதும் இந்தியாவில் ஒரேநாளில் மொத்தம் 1,140 பேர் கொரோனாவுக்கு பலி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்