உலக கொரோனா தொற்று எண்ணிக்கை 26.45 கோடி, பலி 8.73 லட்சம்

வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (07:14 IST)
உலகில் கொரோனா தொற்றால் 26,465,221 பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றால் 873,108 பேர் இதுவரை பலியாகி உள்ளனர் என்றும், உலகில் கொரோனா தொற்றில் இருந்து 18,660,112 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
 
அமெரிக்காவில் கொரோனாவால் 6,335,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 191,058பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் பிரேசில் நாட்டில் கொரோனாவால் 4,046,150பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், 124,729பேர் பலியாகியுள்ளனர் என்றும் தகவல் வெளிவந்துள்ளது
 
உலக கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,933,124என்பதும் பலியானோர் எண்ணிக்கை 68,569 என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,009,995என்பதும் பலியானோர் எண்ணிக்கை 17,528என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
உலக கொரோனா பாதிப்பில் பெரு, கொலம்பியா, தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ஸ்பெயின், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்