World Braille Day! கண் தெரியலைனா படிக்க முடியாதா? – சாதித்து காட்டிய ப்ரெய்லி!

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (11:30 IST)
உலகில் கண் பார்வையற்ற மக்கள் ஏராளமானோர் இருந்து வரும் நிலையில் அவர்களும் படிக்க முடியும் என ஒரு மொழியையே உருவாக்கி காட்டியவர்தான் லூயி ப்ரெய்லி. யார் இந்த லூயி ப்ரெய்லி? எப்படி இந்த மொழியை உருவாக்கினார்?

பிரான்சில் 1809ல் பிறந்தவர் லூயி ப்ரெய்லி. ப்ரெய்லி பிறக்கும்போதே கண்பார்வை அற்றவராக இருக்கவில்லை. 3 வயது வரை அவருக்கு சரியாகவே பார்வை தெரிந்தது. குண்டூசிகளை வைத்து விளையாடியபோது அவை தவறி கண்ணில் குத்தியதால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் பார்வையை இழந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அதே குண்டூசிதான் பின்னாளில் அவர் கண் பார்வையற்றவர்களுக்காக ஒரு மொழியை கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது. குண்டூசிகளை வைத்து சிறு சிறு துளையிட்டு அவற்றை ஒரு வார்த்தை வடிவமாக மாற்றினார் ப்ரெய்லி. இப்படியாக ஒவ்வொரு எழுத்துக்கும் புள்ளிகளால் ஒரு உருவம் தந்தார். பின்னாளில் இவை தகர ஏடுகளில் சின்ன சின்ன மொட்டுகளாக புள்ளிகள் தடவி பார்த்து எளிதில் உணரும்படி ஆக்கப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள கண்பார்வை அற்றவர்கள் படிப்பதற்கு இன்று ப்ரெய்லி மொழி ஒரு பெரும் கருவியாக அமைந்துள்ளது. உலக அளவில் அந்தந்த மொழிகளுக்கு ஏற்ப மாற்றங்களுடன் இந்த ப்ரெய்லி மொழி பயன்படுத்தப்படுகிறது. லூயி ப்ரெய்லியை போற்றும் விதமாக 2019ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4ம் தேதி ப்ரெய்லி தினமாக கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்