விமானத்தில் முகம் சுளிக்க வைத்த பெண்ணின் செயல்: வீடியோ இணைப்பு...

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (16:21 IST)
விமானத்தில் பயணித்த போது பெண் பயணி ஒருவர் செய்த செயல் அருகில் இருந்தவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. 4 தினங்களுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். 
துருக்கியில் உள்ள அன்டால்யா என்ற இடத்தில் இருந்து மாஸ்கோவுக்கு உரல் ஏர்லைன்ஸ் விமானம் பயணித்தது. விமான பயணத்தின் போது பெண் பயணி ஒருவர் தனது உள்ளாடையை விமானத்தின் ஏசி-யில் காய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சம்பவம் அருகில் இருந்த சக பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. இருப்பினும் ஒருவர் இதனை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை தி பர்ஸ்ட் துலா என்ற ரஷ்ய இணையதளத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். 
 
இந்த வீடியோ தற்போது இணையத்தில் உலா வருகிறது. விமானத்தில் அந்த பெண்ணின் செயலுக்கு யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்