குளிர்காலத்தில் கொரொனா தொற்று வேகமாகப் பரவும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
திங்கள், 21 செப்டம்பர் 2020 (18:47 IST)
உலக அளவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் இதுவரை 3கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். இதில் அமெரிக்காவில் அறுபது லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 54 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் கொரொனாவிலிருந்து குணமடைவோர் சதவீதம் 8)% அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதையடுத்தும், உலக சுகாதார அமைப்பு இதுகுறித்து எச்சரித்துள்ளது. அதில், குளிர்காலத்தில் கொரொனா தொற்றுப் பரவல் வேகமாக இருக்கும் எனவும் முதலில் பரவிய போது இருந்ததைவிட அதிகமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.