உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கோடிக்கணக்கில் அதிகரித்துள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் கடந்த சில மாதங்களாக பல நாடுகள் கடுமையான ஊரடங்கை பின்பற்றி வந்தன. இந்நிலையில் பொருளாதாரரீதியாக நாடுகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் தற்போது பல நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.’
இவ்வாறாக தளர்வுகளை செய்து வருவது மேலும் ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் “பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக எந்த நாடும் சொல்ல முடியாது. இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தாமல் சகஜ நிலைக்கு திரும்புவது பேரழிவை ஏற்படுத்தும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.