உலகின் அரிய வகை ஒட்டகச்சிவிங்கி… இப்போது இருப்பது ஒன்றே ஒன்றுதான் !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (12:53 IST)
வெள்ளை ஒட்டகச்சிவிங்கி

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கென்யாவில் வாழ்ந்து வந்த அரியவகை ஒட்டகச்சிவிங்கியான வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனம் அழிவின் விளிம்பில் உள்ளன.

உலகின் அரியவகை விலங்கினங்களில் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் ஒன்று. இந்த வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனங்கள் கென்யா நாட்டில் மட்டுமே வாழ்ந்து வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த இனத்தின் மூன்று ஒட்டகச்சிவிங்கிகள் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில் இப்போது தாயும் குட்டியும் வேட்டையர்களால் கொல்லப்பட்டு அதன் எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.  

இது சம்மந்தமாக  கென்யா வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தற்போது வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனத்தில் ஒரே ஒரு ஆண் மட்டுமே இருப்பதாகவும் அதனைப் பாதுகாக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்