இவரது மறைவை அடுத்து,, இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை ஏற்கனவே அறிவித்தது.
இவ்விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சார்லசின் முடிசூட்டு விழாவில் அவரது 2 வது மகனும் இளவரசருமான ஹாரிக்கு 10 வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் அரச குடும்பத்தினர் மத்தியில் 10 வது வரிசையில் அமர்வார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முடிசூட்டு விழா அடுத்த 3 நாட்களுக்கு நடக்கும் நிலையில், இளவரசர் ஹாரி, தந்தையின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பார் என்று தக்வல் வெளியாகிறது.