உப்பை குறைத்து சாப்பிட்டால் என்னவாகும்? ஆய்வின் அதிர்ச்சி முடிவு!!

வியாழன், 9 மார்ச் 2017 (11:13 IST)
உப்பை தொடர்ந்து குறைவாக உட்கொண்டு வந்தால் மாரடைப்புக்கான ஆபத்து அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


 
 
உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக்கொள்வது உடல் நலனுக்கு தீங்கானது என காலம்காலமாக கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கு முற்றிலும் மாறாக ஒவ்வொருவரும் தற்போது எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவை அதிகரிப்பது அவசியம் என்று கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
 
ஒருவர் 3 கிராமுக்கு குறைவாக சோடியம் உட்கொள்வதால் அவருக்கு மாரடைப்பு, இதயக் கோளாறு மற்றும் மரணத்துக்கான வாய்ப்பு அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்