தமிழக மீனவர்களை விட்டு விடுகிறோம் ; படகுகளை தர மாட்டோம் : விக்ரமசிங்க அடாவடி

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (14:24 IST)
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விட்டு விட்டாலும், அவர்களின் படகுகளை விடுவிக்க முடியாது இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக கூறியுள்ளார்.


 

 
எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை அரசு  கைது செய்து வருகிறது. அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கிறது. தற்போது 140 படகுகள் வரை இலங்கை அரசிடம் உள்ளது.
 
சமீபத்தில் கூட ராமநாதபுரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 மீனவகள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள “இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர். இது மீன் வளத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. நமது மீன்வளம் கொள்ளையடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தற்போது தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 130 முதல் 140 படகுகள் இலங்கை அரசு வசம் உள்ளன. மீனவர்களைத் திருப்பி அனுப்பினாலும் படகுகளை விடுவிக்க முடியாது.
 
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது குறித்து இலங்கை வடக்கு மகாண மீனவர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்