பாட்டிம்மா விண்வெளிக்கு போவோமா? – மூதாட்டியை அழைத்து செல்லும் அமேசான் நிறுவனர்!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (11:37 IST)
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விரைவில் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் உடன் மூதாட்டி ஒருவரையும் அழைத்து செல்ல உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி ஆய்வு மையத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்த ப்ளூ ஆரிஜின் விண்வெளி ஆய்வு மையம் தயாரித்துள்ள நியூ செப்பர்டு என்ற விண்கலம் மூலமாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஜூலை 20ம் தேதி விண்வெளி செல்ல உள்ளனர்.

இந்நிலையில் இந்த விண்வெளி பயணத்தில் 82 வயதான ஓய்வுபெற்ற பெண் விமானி வாலி ஃபாங் என்பவரையும் விண்வெளி அழைத்து செல்ல ஜெப் பெசோஸ் திட்டமிட்டுள்ளார். உலகிலேயே முதன்முறையாக விண்வெளி செல்லும் அதிக வயதுடைய நபர் வாலி ஃபாங் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்