நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் - உக்ரைன் அதிபர்

சனி, 26 பிப்ரவரி 2022 (12:02 IST)
உக்ரைனை விட்டு எங்கும் போகப் போவதில்லை. ரஷியாவுக்கு எதிராக இறுதிவரை உறுதியுடன் போரிடப் போவதாக சூளுரைத்துள்ளார் அதிபர் ஜெலன்ஸ்கி. 

 
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதுகாப்பு ,கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற உதவ தயாராக இருப்பதாக கூறியதற்கு உக்ரைன் அதிபர் நாட்டைவிட்டு வெளியேறப்போவதில்லை. எனக்கு தேவை ஆயுதங்கள் தான் பயணம் அல்ல என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்