34 வருடங்களுக்கு பிறகு, எரிமலை வெடிக்கும் அபாயம்!!

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (16:16 IST)
இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள எரிமலை ஒன்று 34 வருடங்களுக்கு பின்னர் வெடிக்கும் அபாயத்தில் உள்ளதால் அங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


 
 
ஆகங் என்ற எரிமலை கடந்த 1963 ஆம் ஆண்டு வெடித்தது. அப்போது 1000-த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
இந்நிலையில் தற்போது 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெடிக்கும் நிலையில் உள்ளது. எரிமலையில் இருந்து அதிக அளவில் புகை வெளியாகிகொண்டிருக்கிறது.
 
எனவே எரிமலை வெடித்தால் ஏற்ப்படும் உயிரிழப்பு மற்றும் சேதங்களை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
எரிமலையை சுற்றி இருக்கும் 12 கிமி தங்கியிருந்த 1,30,000 மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்