தைவானில் மேல்நோக்கி பாயும் அருவி: வைரலாகும் வீடியோ!!

புதன், 18 அக்டோபர் 2017 (11:49 IST)
சீனாவில் ஏற்பட்டுள்ள புயலால் அருவி ஒன்று பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல்நோக்கி செல்லும் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


 
 
சீன கடற்பகுதியில் கனூன் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்தது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 
 
புயலால் ஹாங்காங் வழியாக மக்காவ் மற்றும் அதன் அருகில் இருக்கும் தீவுகளுக்கு செல்லும் சில விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 
 
மேலும் தைவான் மற்றும் சீனாவிற்கு செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தைவான் மலைப்பகுதியில் கனூன் புயல் காரணமாக அருவி ஒன்று உருவானது. 
 
ஆனால் அந்த அருவி கீழ்நோக்கி பாயாமல் ஈர்ப்பு விசையை எதிர்த்து மேல் நோக்கி பாய்ந்தது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
 

Gravity-defying waterfall (due to the fierce wind brought by Typhoon Khanun in Southern China) in Taidong of Taiwan

Thanks @CGTNOfficial pic.twitter.com/qxqlcRTDzw

— Naumaan Hassan (@nfhassan) October 16, 2017
 
                       
                    நன்றி: CGNT

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்