ஏ.ஆர்.ரஹ்மானுக்காக கெளதம் மேனனிடம் சண்டை போட்ட தனுஷ்

புதன், 27 செப்டம்பர் 2017 (13:47 IST)
ஏ.ஆர்.ரஹ்மானுக்காக இயக்குநர் கெளதம் மேனனிடம் சண்டை போட்டுள்ளார் தனுஷ்.



 

 
கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்தப் படத்தின் ஹீரோயினாக, ‘ஒரு பக்க கதை’யில் நடித்த மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். கெளதம் மேனனுடன் இணைந்து, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்தின் பாதி ஷூட்டிங் இன்னும் முடியவே இல்லை. இந்த வருடம் ஆரம்பித்த விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தைக் கூட இன்னும் சில நாட்களில் முடிக்கவுள்ளார் கெளதம். அப்படியிருக்க, தனுஷ் படம் மட்டும் இழுத்துக்கொண்டு போவது ஏன்?

கெளதம் மேனனுக்கும், தனுஷுக்கும் இடையில் சண்டை என்கிறார்கள். முதல் காரணம், படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை என்று தனுஷிடம் சொன்ன கெளதம் மேனன், ஆனால் யாரோ ஒரு புதியவரை இசையமைக்க வைத்துள்ளார். அது யார் என்பது இதுவரை தெரியவில்லை. இது, தனுஷை பயங்கர கோபத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. அத்துடன், இதுவரை ஒரு ரூபாய் கூட தனுஷுக்கு சம்பளம் கொடுக்கவில்லையாம் கெளதம் மேனன். இதனால் தான் அந்தப் படத்தைவிட்டு வேறு படங்களில் நடிக்க கமிட்டானார் தனுஷ் என்கிறார்கள்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்