ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

Siva
திங்கள், 20 மே 2024 (11:19 IST)
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹீம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் அவர் உயிர் இழந்ததாகவே கருதப்படுகிறது. 
 
ஈரான் அரசு மற்றும் ஈரான் நாட்டு ஊடகங்கள் அதிபர் இப்ராஹீம் உயிர்பிழைக்க வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ள நிலையில் புதிய அதிபர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஒரு பக்கம் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஈரான் நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர்என்பவர் ஈரான் நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இன்று மாலை முக்பர்அதிபராக பொறுப்பேற்பார் என்றும் அதன் பின் அவரிடம் அதிபர் பொறுப்புகள் முழுமையாக ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மீட்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிர் இழந்திருந்தால் அவரது உடல் தேடி கண்டுபிடிக்கப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்