அந்த ஊழல் ஐபிஎஸ் அதிகாரியை விட்டுவிடாதீர்கள்.. தற்கொலைக்கு முன் 3 பக்க கடிதம் எழுதிய சைபர் செல் அதிகாரி..!

Siva

செவ்வாய், 14 அக்டோபர் 2025 (15:49 IST)
ஹரியானாவில் சைபர் செல்லில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் சந்தீப் குமார், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தற்கொலைக்கு முன் அவர் விட்டுச் சென்ற மூன்று பக்க கடிதம் மற்றும் வீடியோ செய்தியில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒய். பூரன் குமார் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
 
ஒய். பூரன் குமார் ஒரு "ஊழல் அதிகாரி" என்றும், தனக்கு எதிராக "போதுமான ஆதாரங்களை" திரட்டி வைத்திருப்பதாகவும் சந்தீப் குமார் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்படுவோம் என்ற பயத்திலேயே ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை செய்துகொண்டதாக சந்தீப் குமார் குற்றம் சாட்டினார்.
 
அந்த ஐபிஎஸ் அதிகாரி "சாதிப் பிரிவினையைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த அமைப்பையும் தவறாக வழிநடத்தியதாகவும்" குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனது உயிரை தியாகம் செய்து ஒரு விசாரணைக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். இந்த ஊழல் நிறைந்த குடும்பத்தை எந்த காரணம் கொண்டும் விட்டுவிடக் கூடாது," என்று சந்தீப் குமார் தனது இறுதி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
 
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்