தெலங்கானா உணவு பாதுகாப்பு ஆணையரகம், 'மசாலா இயக்கம்' என்ற பெயரில் ரங்காரெட்டி மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மசாலா தயாரிப்பு மையங்களில் அதிரடி ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில், ஸ்ரீவாரி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் லிமிடெட் மற்றும் டிவைன் ஸ்பைசஸ் உள்ளிட்ட பல மையங்களில் கடுமையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
பூச்சிகள், எலிகள் நடமாட்டம், சுகாதார குறைபாடு, காலாவதியான மஞ்சள் பொருட்கள் மற்றும் பயிற்சியற்ற பணியாளர்கள் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
எலி எச்சத்தால் அசுத்தமான 15 கிலோ மிளகு மற்றும் 18 கிலோ பிரிஞ்சி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டன. மேலும், லேபிள் இல்லாத கறிவேப்பிலை பொடியும் கைப்பற்றப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மேம்பாட்டு அறிவிப்புகள் வழங்கப்பட்டு, விதிமீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.