ஐநா மனித உரிமை கவுன்சிலில் வைகோவை மிரட்டிய சிங்களர்கள்: பெரும் பரபரப்பு

செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (00:24 IST)
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த கொடூரங்கள் குறித்து பேசுவதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்றுள்ளார் என்பது தெரிந்ததே



 
 
இந்த நிலையில் ஐநா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ள வைகோ செல்ல முயன்றபோது ஐந்து பேர் கொண்ட சிங்களர்கள் குழு ஒன்று அவரிடம் தகராறு செய்ய முயற்சிசித்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
 
இதுகுறித்து பேட்டியளித்த வைகோ, 'ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று மனித உரிமை கவுன்சிலில் இலங்கையில் நடந்தது குறித்து பேசக்கூடாது என்று ஒருசிலர் மிரட்டினர். ஆனால் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை கண்டிப்பாக பேசுவேன் என்று நான் கூறியதால் என்னை தாக்க முயற்சித்தனர். இதுகுறித்து நான் அங்கிருந்த உயரதிகாரி ஒருவரிடம் புகார் அளித்துள்ளேன். அதன்பின்னர் எனக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
 
இந்த நிலையில் வைகோவை சிங்களவர்கள் தாக்க செய்த முயற்சி கண்டனத்துக்குரியது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்