டிரம்ப் உள்ளே இருந்தபோதே சீல் வைக்கப்பட்ட வெள்ளை மாளிகை. அமெரிக்க மக்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (23:59 IST)
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவர் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதால் அவருக்கு ஏராளமான எதிரிகள் தோன்றியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



 


இந்த நிலையில் இன்று டிரம்ப் வெள்ளை மாளிகையின் உள்ளே தனது குடும்பத்தார்களுடன் இருந்தபோது திடீரென வெள்ளை மாளிகைக்கு சீல் வைக்கப்பட்டது.  வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் சந்தேகத்திற்கு இடமான மர்ம பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டதால், அந்த பொருள் என்ன என்று தெரியும் வரை பாதுகாப்பாக வெள்ளை மாளிகையை அதிகாரிகள் சீல் வைத்ததாக தெரிகிறது.

இதன் பின்னர் அந்த மர்மமான பெட்டி அகற்றப்பட்டது. அதில் எந்தவித ஆபத்தையும் விளைவிக்கும் பொருள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். கலிபோர்னியாவை சேர்ந்த அவர் கையில் தண்டாயுதம் போன்ற ஒன்றை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்ததால் அவரை போலீசார் பிடித்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்