அமெரிக்க மதுபானங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் 50 சதவீதம் வரிவிதித்தால், ஐரோப்பிய நாட்டின் மதுபானங்களுக்கு அமெரிக்கா 200 சதவீதம் வரி விதிக்கும் என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் வரி விதித்துள்ளதாகவும், இந்த வரி விதிப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க விஸ்கி மீது ஐரோப்பிய நாடுகள் 50% வரி விதித்தால், ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200% வரி அறிவிக்கப்படும் என அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கூடுதல் வரியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் ஒயின்கள், சாம்பியன்கள் மற்றும் மதுபான பொருட்களுக்கு 200% வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சீனா, மெக்ஸிகோ மற்றும் கனடாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.