துப்பாக்கியை எடுத்து சுட்ட வளர்ப்பு நாய்.. நாயின் உரிமையாளர் படுகாயம்..!

Mahendran

புதன், 12 மார்ச் 2025 (10:24 IST)
அமெரிக்காவில் வளர்ப்பு நாய், தனது ஓனரையே சுட்ட நிலையில், அவர் படுகாயம் அடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள டென்னிசி மாகாணத்தில், ஜெரால்டு என்பவர் உயர் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை 4 மணி அளவில், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது, படுக்கையில் தாவி விளையாடிக் கொண்டிருந்த வளர்ப்பு நாய் திடீரென ஜெரால்டுக்கு சொந்தமான துப்பாக்கியை எடுத்தது.

அந்த துப்பாக்கி, நாயின் காலில் சிக்கிய நிலையில், அது வெடித்ததாக தெரிகிறது. இதில், ஜெரால்டு வலது தொடையில் துப்பாக்கி பாய்ந்ததை அடுத்து, அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

விளையாட்டுத்தனமாக தனது வளர்ப்பு நாய் குதித்துக் கொண்டிருந்த போது, அதன் காலில் துப்பாக்கி சிக்கி விட்டதாகவும், அதனால் துப்பாக்கி வெடித்து, துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்