டிக்டாக் செயலி தடையை ஒத்தி வைத்தது அமெரிக்கா! என்ன காரணம்?

ஞாயிறு, 20 செப்டம்பர் 2020 (11:20 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கா உள்பட வேறு சில நாடுகளிலும் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் டிக் டாக் செயலி தடை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அமெரிக்காவில் டிக் டாக் செயலி இன்று முதல் தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக அமெரிக்க அரசு வெளியிட்ட செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
டிக் டாக் செயலி அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்க காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்த நிலையில் காலக்கெடு முடிவடைந்ததால் அமெரிக்காவில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதித்த தடையை ஒரு வாரத்திற்கு டிரம்ப் நீட்டித்துள்ளார்
 
இந்த ஒரு வாரத்திற்கு என்ன காரணம் என்று விளக்கம் அளிக்கவில்லை என்றாலும் இந்த ஒரு வாரத்திற்குள் அமெரிக்க நிறுவனம் ஒன்று டிக் டாக் செயலியை வாங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்