பன்றி இதயம் பொருத்தப்பட்டவருக்கு புதிய வைரஸ் தொற்று! – அமெரிக்காவில் அதிர்ச்சி!
வெள்ளி, 6 மே 2022 (11:45 IST)
அமெரிக்காவில் பன்றி இதயம் பொருத்தப்பட்டு உயிரிழந்த நபருக்கு புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் என்ற நபர் கடந்த சில மாதங்கள் முன்னதாக இதய கோளாறால் மேரிலேண்ட் மருத்துவ பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு பரிசோதனை முயற்சியாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது. இது உலகளவில் மருத்துவத்துறையில் பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. பன்றி இதயம் பொருத்தியபின் 2 மாதங்கள் உயிர் வாழ்ந்த பென்னட் திடீரென உயிரிழந்தார்.
இந்நிலையில் உயிரிழந்த டேவிட்டின் இதயத்தை ஆய்வு செய்ததில் அதில் போர்சின் சைட்டோமெகலோ வைரஸ் எனப்படும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.