குப்பையால ஸ்ட்ரெஸ் ஆனேன்.. அதான் ட்ரெஸ் ஆக்கிட்டேன்! – அமெரிக்காவில் நூதனமான முறையில் விழிப்புணர்வு!

திங்கள், 23 மே 2022 (12:49 IST)
அமெரிக்காவில் குப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நபர் ஒருவர் குப்பைகளையே உடையாக்கிய சம்பவம் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது மிகப்பெரும் பிரச்சினையாக உருமாறி வருவது குப்பை மேலாண்மைதான். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் என உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்த குப்பைகள் நிலத்தில் புதைந்தாலும், கடலில் கலந்தாலும் எந்த வகையிலும் இயற்கைக்கும், சுற்றுசூழலுக்கும் ஆபத்து விளைவிப்பதாக மாறியுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குப்பைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த ராப் க்ரீன்ஃபீல்ட் என்ற நபர் புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார். ஒரு மாத காலமாக தான் வீட்டில் சேர்ந்த குப்பைகளை சேர்த்து உடையாக்கி அதை அணிந்து சாலையில் வலம் வந்துள்ளார். தனி மனிதன் ஒருவன் ஒரு மாதத்தில் வெளியேற்றும் குப்பை எவ்வளவு இருக்கிறது பாருங்கள் என மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அவர் இதை செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்