சென்னையை நெருங்கும் புயல் ஏழு விமான சேவை ரத்து!!

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (09:27 IST)
புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ஏழு விமானங்களின் சேவை ரத்து.


மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலை நிலவரப்படி சென்னையில் இருந்து 320 கீமி தொலைவிலும் காரைக்காலில் இருந்து 240 கீமி தொலைவில் மாண்டஸ் புயல் நிலைக்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. புயலானது சென்னை தென் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக இன்று இரவு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் பேருந்து சேவை இருக்காது என  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் எழு விமானங்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி, கொழும்பு, கடப்பா, மும்பை மீண்டும் அங்கிருந்து சென்னை திரும்பும் விமானங்கள் சேவை ரத்தாகியுள்ளது.

பயணிகளின் வருகை பொருந்தும், சென்னையில் புயலின் தாக்கத்தை பொருத்தும் மேலும் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட வாய்ப்புள்ளதாக தெரிகிறது என சென்னை விமான நிலையம் அறிவிப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்