அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தக போரை குறைக்கும் முயற்சியாக, தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.
முன்னதாக, டிரம்ப் பதவி ஏற்ற பின் சீனா உட்படப் பல நாடுகள் மீது கூடுதல் வரிகளை விதித்திருந்தார். இந்த சந்திப்பின்போது பேசிய ஸி ஜின்பிங், "அமெரிக்காவும் சீனாவும் அடிக்கடி நேரில் சந்திக்காவிட்டாலும், அவர்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும்" என்றும், உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாகவும், முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதன் விளைவாக, சீன இரசாயனப் பொருட்களுக்கான வரியை 20% இலிருந்து 10% ஆகக் குறைத்து அவர் அறிவித்தார்.