இன்னும் ஒரு கையெழுத்து; அணு ஆயுதத்திற்கு தடை! – கடுப்பில் அமெரிக்கா, சீனா!

Webdunia
ஞாயிறு, 25 அக்டோபர் 2020 (12:27 IST)
உலகம் முழுவதும் அணு ஆயுதங்களுக்கு தடை விதிக்க ஐ.நா முயன்று வரும் நிலையில் 50வது கையெழுத்தை இட ஒரு நாடு முன்வந்துள்ளது.

உலக நாடுகள் அணு ஆயுதம் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க 2017ல் ஐ.நா சபை தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இந்த தீர்மானத்திற்கு அப்போதிருந்தே சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு தீர்மானத்தில் கையெழுத்திடவும் மறுத்துள்ளன.

இந்நிலையில் இதுவரை 49 நாடுகள் இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில் 50வது நாடாக ஹோண்டுராஸ் கையெழுத்திட சம்மதித்துள்ளது. 50 நாடுகளின் ஒப்புதலையடுத்து அணு ஆயுத தடை சட்டம் அமலுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்