உலகை உலுக்கிய சிரியா ரசாயன தாக்குதல்: எதிரொலிக்கும் கண்டனங்கள்!!

Webdunia
புதன், 5 ஏப்ரல் 2017 (13:17 IST)
சிரியாவில் நடத்தப்பட்ட ரசாயன வெடிகுண்டுத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இது உலக அரங்குகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


 
 
சிரியாவின் இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் என்னும் நகரில், ரசாயன வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 
 
சிரியா அரசுக்குச் சொந்தமான விமானப்படையின் போர் வீரர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
இந்த தாக்குதலில் சுமார் 20 குழந்தைகள் பலி ஆகி இருப்பதாகவும் ஐ.நா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ஐ.நா அமைப்புகள், இந்தச் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
ஆனால், சிரியா ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று மறுத்துவருகிறது. மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க, ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாகக் கூட்டபடும் என்று அறிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்