யார் கேட்டாலும் ஆயுதம் கொடுப்போம், விரைந்து வாருங்கள்: உக்ரைன் அதிபர் டுவிட்

வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:01 IST)
நாட்டை காக்க யார் வந்து ஆயுதம் கேட்டாலும் அவர்களுக்கு ஆயுதங்கள் கொடுப்போம் என்றும் எனவே நாட்டை காக்க விரைந்து வாருங்கள் என்றும் உக்ரைன் அதிபர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
 இன்று காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் தலைநகர் உள்பட பல நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது
 
இந்த நிலையில் ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று கூறிய உக்ரைன் அதிபர், நாட்டை காப்பதற்காக யார் வந்து கேட்டாலும் ஆயுதம் கொடுப்போம் என்றும் தாய் நாட்டை காப்பாற்ற விரைந்து வாருங்கள் என்றும் அவர் தனது டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
ரஷ்யாவை எதிர்த்து போரிட தயார் என்று வருபவர்களுக்கு தகுந்த ஆயுதங்களை கொடுத்து ரஷ்ய ராணுவ வீரர்களை எதிர்க்க பயிற்சி கொடுங்கள் என்றும் அவர் இராணுவத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்