உக்ரைன் மக்களே இங்க வாங்க..! – அடைக்கலம் தரும் மால்டோவா!
வியாழன், 24 பிப்ரவரி 2022 (14:43 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் நாட்டை விட்டு வெளியேறும் மக்களுக்கு மால்டோவா அரசு அடைக்கலம் தருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்குள் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.
ரஷ்ய தாக்குதலால் 100 உக்ரைன் வீரர்கள் இறந்துள்ள நிலையில் 7 பொதுமக்களும் பலியாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் நகரங்களை விட்டு வெளியேறியுள்ள மக்கள் பலர் அகதிகளாக சுரங்க பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் போர் காரணமாக உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்கள் தங்கள் நாட்டிற்கு வரலாம் என மால்டோவா நாட்டு அதிபர் மையா சாண்டு தெரிவித்துள்ளார். எத்தனை ஆயிரம் மக்கள் வந்தாலும் ஏற்று அடைக்கலம் வழங்க தயார் என அவர் தெரிவித்துள்ளார்.