ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு பயோமெட்ரிக்கை கடவுச்சொல்லாக பயன்படுத்த தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு பழக்கமாகி விட்ட நிலையில் Google Pay, Phonepe, PayTM என பல UPI செயலிகளை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றன. இந்த செயலிகள் மூலமாக பணம் செலுத்த 4 அல்லது 6 இலக்க PIN எண்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையில் PIN எண்ணை பணம் செலுத்தும் முன் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம்.
ஆனால் சிலர் பின் எண்ணை மறந்துவிடுவது, மற்றொருவர் பின் எண்ணை தெரிந்துக் கொண்டு சிலர் பணத்தை முறைகேடு செய்வது போன்ற சம்பவங்களும் அவ்வபோது நடப்பதால் UPI பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாக மேற்கொள்ள தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் காலத்தில் பயோமெட்ரிக்கை பணம் செலுத்தும் கடவாக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதன்மூலம் பணம் செலுத்துபவர்கள் தங்கள் கைரேகையையோ அல்லது முக அடையாளத்தையோ பயன்படுத்தி பணம் செலுத்த முடியும். இதனால் பணத்திற்கு உரியவர்கள் மட்டுமே பணத்தை செலுத்த முடியும் என்பதுடன், பண மோசடிகள் தடுக்கப்படும் என கூறப்படுகிறது.
Edit by Prasanth.K