பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார்! – கோரிக்கை விடுக்கும் உக்ரைன்!

வியாழன், 24 பிப்ரவரி 2022 (15:31 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக உக்ரைன் தூதர் பேசியுள்ளார்.

உக்ரைன் எல்லையில் ராணுவத்தை குவித்து வந்த ரஷ்யா தற்போது அதிகாரப்பூர்வமாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில், உக்ரைன் நகரங்களுக்குள் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர்.

ரஷ்ய தாக்குதலால் 100 உக்ரைன் வீரர்கள் இறந்துள்ள நிலையில் 7 பொதுமக்களும் பலியாகியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து உக்ரைனை காப்பாற்ற உலக நாடுகள் உதவ வேண்டும் என முன்னதாக உக்ரைன் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். தற்போது பேசியுள்ள உக்ரைன் தூதரகம் “உக்ரைன் மீது தொடர்ந்துள்ள போரை நிறுத்த ரஷ்யாவிற்கு இந்தியா அழுத்த தர வேண்டும். உலக அளவில் பிரதமர் மோடிக்கு சிறப்பான இடம் உள்ளதால் அவர் சொல்வதை புதின் பரிசீலிப்பார். போர் நிறுத்தத்தில் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்