இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை - செலன்ஸ்கி

வியாழன், 3 மார்ச் 2022 (17:36 IST)
இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை என உக்ரைன் அதிபர் வொலாடிமிர் செலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 8  வது நாளாகப் போர் நடந்து வருகிறது. இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.  இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்த போதிலும் அவை தோல்வி அடைந்தன.
 
இந்நிலையில்,  ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர்  உக்கிரம் அடைந்து வருகிறது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகளும் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய  நாடுகள் அணு ஆயுத உதவிகள் செய்து வருவதாக ரஸ்யா குற்றம் சாட்டியது.
 
இதனிடையே உக்ரைன் அதிபர் வொலாடிமிர் செலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், உக்ரைன் பாதுகாப்பு படைகள் ரஷ்ய படைகளுக்கு ஈடுகொடுத்து வருகின்றன. இருப்பினும் ரஷ்ய படைகள்  உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து ஷெல் குண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
 
பொதுமக்கள் இருக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்த ரஷ்ய திட்டமிட்டிருப்பதன் மூலம், ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்கும் முயற்சியில் யுக்ரேன் வெற்றிப் பெற்றுள்ளது என்று தெரிகிறது. எங்களிடம் இழப்பதற்கு எங்களின் சுதந்திரத்தை தவிர வேறு ஏதுமில்லை என்று செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்