உக்ரைனுக்கு அரசியல் ரீதியில் ஆதரவளியுங்கள்: மோடியிடம் உக்ரைன் அதிபர் வேண்டுகோள்

ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (09:00 IST)
உக்ரைன் நாட்டிற்கு அரசியல் ரீதியாக இந்தியா ஆதரவளிக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே தற்போது போர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட், பாகிஸ்தான் உள்பட ஒரு சில நாடுகள் தவிர அனைத்து நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளித்து வருகின்றன 
இந்த நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவளிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை உக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
 
 இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய உக்ரைன் அதிபர் அரசியல் ரீதியாக உக்ரைன் நாட்டிற்கு ஆதரவளிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இதனை அடுத்து இந்திய பிரதமர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்