2 வது டி-20 போட்டியில் அசத்தல் வெற்றி- தொடரை வென்றது இந்தியா !

சனி, 26 பிப்ரவரி 2022 (23:08 IST)
இலங்கை அணிக்கு எதிரான 2 வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி ஏற்கனவே முதலாவது டி-20 போட்டியில் இலங்கை தோற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டியில் விளையாடியது.
.
மாலை ஏழுமணிக்கு தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன்            ரோஹித் சர்மா, பவுலிங்க தேர்வு செய்தார்.

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடிவரும் நிலையில், 20  ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு  183   ரன்கள் எடுத்து, இந்திய அணிகு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.

இதையடுத்து விளையாடிய இந்திய அணியில்,  சஞ்சு சாம்சன்  39 ரங்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 74 ரன்களும்,  ஜடேஜா 45 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

இந்திய அணி 3  விக்கெட்டுகள் இழந்து 186 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவெ இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 –ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  நாளை கடைசிப் போட்டி  தர்மசாலாவில் நடைபெறவுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்