போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க புதிய செயலி.. உக்ரைன் அரசு அறிமுகம்..!

சனி, 8 ஏப்ரல் 2023 (14:31 IST)
போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிப்பதற்காக உக்ரைன் நாட்டு அரசு புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
 
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது என்பதும் இதில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே. மேலும் போரில் பல குழந்தைகள் காணாமல் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் போரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக ரீயூனைட் உக்ரைன் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. 
 
போரில் பிரிந்த குழந்தைகளின் தகவல்கள் இந்த செயலியில் பதிவு செய்யப்படும் நிலையில் அந்த குழந்தையை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் போரில் காணாமல் போன குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்