உக்ரைன் மக்களுக்கு 10,000 துப்பாக்கிகள் - அரசு முடிவு!

வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (10:43 IST)
உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு அரசு 10,000 துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்துள்ளன என தகவல் வெளியாகியுள்ளது. 

 
இரண்டாவது நாளாக இன்று உக்ரைன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மத்திய கீவில் இரு பெரிய குண்டு வெடிப்புகளையும், மூன்றாவதாக தூரத்தில் பெரிய குண்டு வெடிப்பையும் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ் நகரை நோக்கி முன்னேறுகிறது என்பதால் உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு அரசு 10,000 துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்துள்ளன. அதோடு ரஷ்யாவின் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தினோம் என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. கீவ் நகரின் டார்னிட்ஸ்கியில் ரஷ்யாவின் ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்