தலைநகர் கீவ்வின் புறநகரை ரஷ்யாவிடமிருந்து மீட்ட உக்ரைன்!

புதன், 23 மார்ச் 2022 (11:06 IST)
25 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய படை திணறுகிறது என தகவல். 

 
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் 25 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் தொடர்ந்து வேகமாக முன்னேற முடியாமல் ரஷ்ய படை திணறுகிறது என தெரியவந்துள்ளது. 
 
பலமான எதிர் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் ராணுவம், தலைநகர் கீவ்வின் புறநகரை ரஷ்யாவிடமிருந்து மீட்டுள்ளது. ஆனாலும் மரியுபோல் நகரில் தொடர்ந்து தாக்குதல் தொடர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
ஆம், ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சுக்கு மத்தியில், உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் மேரியோபோல் நகரில் ஒரு லட்சம் பேர் உள்ளதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்