பூமிக்குள் புதைந்த இரண்டு கிராமங்கள்: அழிவின் ஆரம்பம்!!

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (12:03 IST)
ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவில் சிக்கி 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


 
 
உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. பனிச்சரிவால் நூற்றுக்கணக்கான வீடுகள் பூமியில் புதைந்துள்ளன.
 
பார்க்மட்டல் என்ற மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் அங்கு உள்ள இரண்டு கிராமங்கள் முற்றிலுமாக பூமியில் புதைந்தன. ஹாப்சி என்ற கிராமத்தில் பனிச்சரிவில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உள்பட 50 பேர் உயிரிழந்தனர்.
 
இதை தவிர தலைநகர் காபூல், பதாக்ஷான் மாகாணம், சாரிபால் மாகாணம், பாத்க்கிஸ் மாகாணம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 54 பேர் உயிரிழந்தனர்.
 
மேலும், ஏராளமானோர் பனிக்கட்டிக்குள் சிக்கி தவித்து வருவதால்,  மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டுரையில்