துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டி விட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை துருக்கி சிரியா எல்லையில் 7.8 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் அதில் இடுப்பாடுகள் இடையே பலர் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படும் நிலையில் மீட்பு பணியினர் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்
இதுவரை இந்த நிலநடுக்கம் காரணமாக 521 பேர் உயிரிழந்ததாகவும், 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.