இந்தியா -பாகிஸ்தான் மோதலில் துருக்கி பாகிஸ்தானை ஆதரித்த பின்னர், இந்தியாவில் துருக்கி பொருட்களை தவிர்க்கும் இயக்கம் தீவிரமாக நடந்தது. இப்போது, பாகிஸ்தான் மற்றும் காசா போல துருக்கி பொருளாதாரமும் எதிர்காலத்தில் பின்தங்கும் வாய்ப்பு உள்ளது என தெரியிறது. தற்போது துருக்கி பொருளாதாரம் வரலாற்றில் மிக கடுமையான நெருக்கடியில் உள்ளது.
துருக்கியின் பணவீக்கம் மிக மோசமாக உள்ளது. உலகளவில் பணவீக்கம் அடிப்படையில் துருக்கி 6வது இடத்தில் உள்ளது. அங்கு பண வீக்கம் சுமார் 38 சதவீதம் ஆகும். அதே சமயம் இந்தியாவில் பண வீக்கம் சுமார் 3.16 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்தியா மற்றும் துருக்கியின் பண வீக்கத்தை ஒப்பிடும் போது, துருக்கியில் பண வீக்கம் இந்தியாவைவிட 12 மடங்கு அதிகம்.
2023-24 ஆண்டில் இந்தியா மற்றும் துருக்கி இடையே 88,655 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் இந்தியாவில் தற்போது துருக்கிக்கு எதிரான இயக்கத்தால் இந்த வர்த்தகம் குறைந்தால், துருக்கி மக்களின் வருமானம் நேரடியாக பாதிக்கப்படும். இந்தியாவிலிருந்து துருக்கிக்கு இறக்குமதி குறையும்போது, அங்கே பொருட்களின் விலை உயரும். மேலும், துருக்கி நாணயமான லீராவின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைவதும் பண வீக்கம் அதிகரிக்கும் முக்கிய காரணமாகும்.
தற்போது துருக்கியில் வாழ்வதற்கான செலவு இந்தியாவைவிட 96.9 சதவீதம் அதிகமாக உள்ளது. வீட்டு வாடகை 203.5 சதவீதம் அதிகம். ஆகவே, இந்தியாவின் நடவடிக்கை தொடர்ந்தால், துருக்கி பொருளாதாரம் வேகமாக மோசமாகும்.