சீனாவின் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்: ஐசிஎம்ஆர்

திங்கள், 27 ஏப்ரல் 2020 (16:31 IST)
சீனாவின் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்
இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடிதம் எழுதியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சீனாவின் Guangzhou wondo Biotech Zhuhai livzon ஆகிய இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவி தவறான முடிவை காண்பிப்பதாக ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் புகார் அளித்த நிலையில் இந்த ரேபிட் கிட் மூலம் சோதனை செய்ய வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சமீபத்தில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் சற்றுமுன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்தும் 5.5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என்றும், அவற்றை வாங்கிய நிறுவனத்திடமே திருப்பி அளித்துவிடவும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் ரேபிட் டெஸ்ட் கருவிகளுக்கு பதிலாக RT-PCR டெஸ்ட் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்