திருநங்கைகளால் ராணுவத்தில் ஏற்படும் அதிக அளவிலான மருத்துவ செலவுகள் மற்றும் பிளவுகள் காரணமாகவே இந்த முடிவிற்கு தள்ளப்பட்டதாக டிரம்ப் விளக்கமளித்தார். டிரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வாஷிங்டன் மாகாண நீதிமன்றம் உள்பட மூன்று நீதிமன்றங்கள் டிரம்ப் அறிவிப்புக்கு தடை விதிப்பதாக தீர்பளித்தது.