தமிழோடு பிரியாணியை சுவைக்க.... ’’இதைச் செய்தால் பிரியாணி இலவசம்’’….படையெடுத்த மக்கள் கூட்டம்

Webdunia
திங்கள், 30 நவம்பர் 2020 (17:46 IST)
சிங்கப்பூரில் உள்ள லிட்டிங் இந்தியா என்ற பகுதியில் உணவகம் நடத்தி வருபவர்கள் ஷேக், பாபா ஹூசைன். இவர்கள் தென்காசி மற்றும் மதுரையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் தமிழ் மீது பற்றுகொண்டவர்கள் என்பதால் தமிழை ஆர்வத்தில் தங்கள் ’’தென்காசி சாரல்’’ என்ற ஹோட்டலில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அதில், தங்கள் கடையில் அங்குள்ள பிரபல தமிழ் நாளிதழ்களை வாங்குவோருக்கு இலவச நாட்டுக்கோழி பிரியாணி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

இன்று இந்தச் சலுகையானது முதலில் வந்த 250 பேருக்கு மட்டும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்