1.28 கோடியாக உயர்ந்த உலக கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் மிக மோசம்

ஞாயிறு, 12 ஜூலை 2020 (07:36 IST)
1.28 கோடியாக உயர்ந்த உலக கொரோனா பாதிப்பு
உலகம் முழுக்க 1.28 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. உலக சுகாதார மையம் அளித்த தகவலின்படி உலகம் முழுக்க 1,28,39,566 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுக்க கொரோனாவிலிருந்து 74.64 லட்சம் பேர் மீண்டனர். மேலும் உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கி 5.67 லட்சம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
உலகில் அதிகமான அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,749 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனாவால் மொத்தம் 3,355,646 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் அமெரிக்காவில் கொரோனாவால் 137,403 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரேசிலில் 36474 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா உறுதியானது என்பதும் நேற்று ஒரே நாளில் பிரேசிலில் கொரோனாவிற்கு 998 பேர் மரணம் அடைந்தார்கள் என்பதும் அதிர்ச்சிக்குரிய தகவல். இந்த நிலையில் பிரேசிலில் கொரோனாவால் மொத்தம் 1,840,812 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் பிரேசிலில் கொரோனாவால் 71,492 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் இந்தியாவில் கொரோனாவால் மொத்தம் 850,358 பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் இந்தியாவில் கொரோனாவால் 22,687 பேர்கள் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்