புலிக் கூண்டுக்குள் விழுந்த இளைஞர்.. ஆவேசம் அடைந்த புலி....நடந்து என்ன ? வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (19:03 IST)
சவூதி அரேபியா நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் ஒரு நபர் புலி கூண்டினுள் ஒரு நபர் விழுந்துவிட்டார்.  நல்ல வேளையாக அங்கிருந்த ஊழியர்களின் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சவூதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் 24 வயதுள்ள ஒரு நபர், புலிகள் வசிக்கும் கூண்டினுள் விழுந்தார். அவரைப் பார்த்த புலி ஆவேசத்துடன் அவரைக் கடிக்க ஆரம்பித்தது. இளைஞர் வலியால் கத்தி கதறி கூச்சலிட்டார்.

அதைக் கண்ட ஊழியர்கள், துரிதமாக யோசித்து, ஒரு துப்பாக்கியில் மயக்க மருந்தைச் செலுத்தி அந்த புலி மயக்கம் அடைந்தபின் இளைஞரை மீட்டனர். 
 
 அந்த இளைஞர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்