மரணத்திற்கு பின் ஜனனம்; சாத்தியமா?? ஆதாரம் இதோ!!

வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (14:10 IST)
ஜெர்மன் பலக்லைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் மரணத்திற்கு பின் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். 


 
 
ஜெர்மனியை சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் டாக்டர்கள் இணைந்த குழு ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின் வாழ்க்கை நிச்சயம் உள்ளது என அவர்கள் நிரூபித்துள்ளனர். 
 
இதர்கு கடந்த 4 ஆண்டுகளாக ஆய்வை நடத்தி வந்த விஞ்ஞானிகள் இதற்கு ஒரு விடையை கண்டுபிடித்துள்ளனர். மரணம் அடைந்தவர்களின் உடலில் ஒரு புதிய வகை தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ கண்காணிப்பு மூலம் இதனை அவர்கள் நிரூபித்துள்ளனர்.

இந்த தொழில் நுட்பத்தில் முக்கிய மருந்து கலவைகள் பயன்படுத்தப்படுகிறது. அவை எபிநெப்ரின் மற்றும் டைமெத்தில்டிரிப்டமைன் ஆகும். 
 
இந்த மருந்துகளின் கலவை மரணித்த உடலினை எந்தவித சேதமின்றி உயிர்ப்பிக்க செய்யும். அதனை தொடர்ந்து அந்த உடல் நினைவு இழந்த நிலையில் வைக்கப்படுகிறது. 
 
பின்னர் மருந்து கலவைகளின் தூண்டுதலால் ரத்தத்தில் இருக்கும் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. 
 
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மரணத்திற்கு பிறகு நிச்சயம் வாழ்க்கை உண்டு என்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்