சிறுமியை கற்பழித்த கிராம தலைவர்: அதிர்ச்சியில் தந்தை மரணம்!

திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (13:16 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவரை கிராம தலைவரும், கான்ஸ்டபிள் ஒருவரும் சேர்ந்து கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதனை கேள்விப்பட்ட சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.


 
 
உத்தரபிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை வழிமறித்த போலீஸ் கான்ஸ்டபிள் மற்றும் கிராம தலைவர் ஆகியோர் இணைந்து கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
 
இதனையடுத்து அந்த சிறுமி அழுதுகொண்டு இருந்துள்ளார். அவரது அழுகுரல் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் சிறுமியை மீட்டனர். இதனையடுத்து சிறுமி கற்பழிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அந்த சிறுமியின் தந்தை அதிர்ச்சியில் மரணமடைந்துள்ளார்.
 
இந்நிலையில் தலைமறைவாக இருந்த போலீஸ் கான்ஸ்டபிளை உத்தரபிரதேச மாநில போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்